பெண்ணியம் விருதுகள் 2024


பெண்ணியம் விருதுகள் 2024

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை பெண்களுக்கு மாநில அளவிலான விருது


யார் எல்லாம் கலந்து கொள்ளலாம் ?

பள்ளி மாணவிகள் - (பள்ளி நிறுவனங்கள்)
கல்லூரி மாணவிகள் - ( கல்லூரி நிறுவனங்கள் ) 


போட்டி முறை :

கட்டுரை எழுதுதல்

தலைப்பு :

வல்லரசு இந்தியாவிற்கு பெண்களின் பங்களிப்பு.


வளர்ந்து வரும் இந்தியாவை வல்லரசு இந்தியாவாக உருவாக்க பெண்களின் பங்களிப்பு மற்றும் கடமைகள் பற்றிய நற்சிந்தனை & சொந்த வரிகளில் கட்டுரைகளாக தொகுத்து எழுதலாம்.


பள்ளி & கல்லூரிகளுக்கான விதிமுறைகள் :


விதிமுறைகள் :

1. கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு சம்மந்தமாக இரண்டு பக்கத்திற்கு குறையாமல் அல்லது 50 வரிகளுக்கு குறைவில்லாமல் கட்டுரை எழுத வேண்டும்.

2. மாணவிகள் பள்ளி/ கல்லூரியிலோ அல்லது வீட்டில் இருந்த படியோ கட்டுரை எழுதலாம். தங்களின் சுய சிந்தனையில் எழுத வேண்டும்.

3. கட்டுரை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம்.

4. முதல் பக்கத்தில் பெயர், துறை (Department) , வருடம், பிறந்த தேதி மற்றும் பள்ளி/ கல்லூரி பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

5. மாணவிகள் எழுதிய கட்டுரையுடன் பள்ளி/ கல்லூரி அடையாள அட்டை நகல் ( SCHOOL / COLLEGE ID CARD XEROX ) இணைத்து சமர்பிக்கவும்.

6. போட்டி தேர்வில் கலந்துக் கொண்டு கட்டுரை சமர்ப்பிக்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

7. முதல் மூன்று நபர்களுக்கு சான்றிதழ் & விருது வழங்கப்படும்.

8 .இப்போட்டி தேர்வில் தங்களது பள்ளி/ கல்லூரி மாணவிகள் பங்கு பெறுகிறார்கள் என்பதை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் உறுதிசெய்யவும்.

9. தங்களது பள்ளி/ கல்லூரி மாணவிகள் இப்போட்டி தேர்வில் கலந்து கொள்கிறார்கள் என்பதை  இணையதளம் அல்லது தொலைபேசி மூலம் கட்டாயம் முன்பதிவு செய்யவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கட்டுரை அனுப்பும் முறை - 1

1. எழுதிய கட்டுரை மற்றும் தேர்வு கட்டணத்தை வகுப்பு ஆசிரியர் அல்லது துறைத்தலைவர் அல்லது முதல்வரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

2. தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது பள்ளி / கல்லூரிக்கு நேரில் வந்து கட்டுரை மற்றும் தேர்வு கட்டணத்தை பொற்றுகொள்வார்கள்.

( அல்லது )

கட்டுரை அனுப்பும் முறை - 2

1. ( I )மாணவிகள் எழுதிய கட்டுரைகளை கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

( அல்லது )

( II ) மாணவிகள் எழுதிய கட்டுரைகளைscanசெய்து PDF வடிவில் கல்லூரி ID CARD உடன் இணைத்து கீழ்காணும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி WHATSAPP எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

2. போட்டி தேர்வுகான தொகையை G pay மூலம் அனுப்பலாம். (பள்ளி / கல்லூரி அல்லது மாணவி பெயர் குறிப்பிட்டு அனுப்பவும்)

3. Scanசெய்து மின்னஞ்சல் அல்லது WHATSAPP மூலம் அனுப்பும் பள்ளி / கல்லூரி நிர்வாகம் அல்லது மாணவிகள் அதனுடன்G payமூலம் போட்டி தேர்வு தொகை ரூ.20/-அனுப்பியதற்கானScreenshotஇணைத்து அனுப்ப வேண்டும்.

கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 28/02/2023

தேர்வு கட்டணம் : ரூ.20/- மட்டும்.

மின்னஞ்சல் : tsfofficialtn@gmail.com

தொலைபேசி எண்: 8675516615, 9443081263

G PAY NUMBER :8675516615 , 9524834577


தேர்வு செய்யும் முறை :

  • சிறந்த மற்றும் சமூக அக்கறை உடைய நற்சிந்தனைகள் கொண்ட கட்டுரைகள் மட்டுமே விருதுக்கு தகுதி உடையவையாக கருதப்படும்.
  • தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு தேர்வு ஆலோசகர்கள் மற்றும் தேர்வு குழு நடுவர்கள் மூலம் சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்படும்.
  • நடுவர்களின் தீர்பே இறுதியானது.
  • தேர்வு செய்யப்பட்ட மாணவிகளின் பெயர் பட்டியல் பள்ளி & கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

   தங்களது பள்ளி மற்றும் கல்லூரி  மாணவிகள் இப்போட்டி தேர்வில் கலந்து கொள்கிறார்கள் எனில் கீழே உள்ள படிவத்தை பூர்தி செய்து submit செய்யவும்

Participation School / College Application Form

plz Fill and submit

போட்டித்தேர்வு சம்மந்தமான சுற்றறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது... 


Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started